Home இந்தியாடெல்லியில் தமிழக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

டெல்லியில் தமிழக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

by admin


காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 37 நாட்களாக தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நாள்தோறும் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தநிலையில், விவசாயிகளின் பிரதிநிதிகளும் விவசாயிகளும் இந்திய  மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை இன்று சந்தித்து பேசினர்.

இதனைத் தொடர்ந்து பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, தங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும்  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்துள்ளார் எனவும் அதன் அடிப்படையில் 2 நாட்களுக்கு போராட்டத்தை ஒத்திவைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More