Home உலகம்ரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் பலி

ரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் பலி

by admin


ரஸ்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்யாவின் ஹாபரோஸ்க்   (khabarovsk ) பிராந்தியத்தில் அமைந்துள்ள கனேடிய மத்திய பாதுகாப்பு காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும், காரியாலயத்திற்கு வந்திருந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காரியாலயம் சீனாவிற்கு அருகாமையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனந்தெரியாத நபர் ஒருவர் காரியால வரவேற்பறைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் நடத்திய நபர் உள்ளுரைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More