பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவருடன் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும்; அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழு ஒன்றும் செல்ல உள்ளது.
இந்த பயணத்தின் போது பிரதமர் தலைமையிலான குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்திய மத்திய அரசின் அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியையும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாபா, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டவர்களும் இந்த பயணத்தில் பிரதமருடன் இணைந்து கொள்ள உள்ளனர். எட்கா உடன்படிக்கை குறித்து இந்த பயணத்தின்; போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.