இலங்கை

இலங்கை பாகிஸ்தான் இராணுவத் தளபதிகளுக்கு இடையில் சந்திப்பு


இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் இராணுவத் தளபதிகளுக்கு இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஒமர் ஜவாட் பாஜ்வா( Qamar Javed Bajwa      ) வைச் ஐ சந்தித்துள்ளார். இலங்கை இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வா தற்போது பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நிலையில் பாகிஸ்தானின் இராணுவத் தலைமையகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிய படையினரின் திறமைகள் பாராட்டுக்குரியவை எனவும் தேசிய மற்றும் பிராந்திய ரீதியில் ஆற்றி வரும் பணிகள் போற்றத்தக்கது எனவும் இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பாகிஸ்தானால்  வழங்கப்பட்டு வந்த ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply