184
மண்சரிவில் உயிரிழந்த 5 பேரின் சடலங்கள் இறுதிக் கிரியைகளோ சவப்பெட்டியோ இன்றி புதைக்கப்பட்ட துயரச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இரத்தினபுரிக்கும் களுத்துறைக்கும் இடையில் அமைந்துள்ள கொலம்பேவ ஆயாகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 62 வயதான குணவதி உள்ளிட்ட ஐந்து பேரின் சடலங்கள் இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளன.
சவப்பெட்டிகளை கொள்வனவு செய்யோ இறுதிக் கிரியைகளை நடத்தவோ போதியளவு பணம் தம்மிடம் இல்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பொலித்தீனில் சுற்றப்பட்ட சடலங்கள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன.
Spread the love