விளையாட்டு

உலகின் ஈடு இணையற்ற குறுந்தூர ஓட்ட வீரராக ஹ_செய்ன் போல்ட் திகழ்கின்றார் – செபாஸ்ரியன் கோ


உலகின் மிகச் சிறந்த குறுந்தூர ஓட்ட வீரர் ஹ_செய்ன் போல்ட் என பிரபல ஓட்டப் பந்தய வீரர் செபாஸ்ரியன் கோ  ( Sebastian Coe )தெரிவித்துள்ளார். 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் உள்ளிட்ட நான்கு ஒலிம்பிக் பதக்கங்களை செபாஸ்ரியன் கோ   வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹ_செய்ன் போல்ட் சொந்த மண்ணில் இறுதியாக 100 மீற்றர் போட்டியொன்றில் பங்கேற்றமை தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். கால்பந்தாட்டம், கொல்ப், டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் உலகில் உருவான மிகவும் தலைசிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு சரியான விடையளிக்க முடியாது எனவும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பரிந்துரைப்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மெய்வல்லுனர் போட்டிகளில் குறிப்பாக குறுந்தூர ஓட்டப் போட்டியில் உலகில் இதுவரையில் உருவான தலைசிறந்த வீரர் ஹ_செய்ன் போல்ட் மட்டுமே எனவும் அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது எனவும்  செபாஸ்ரியன் கோ   குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply