Home இந்தியாசபாநாயகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

சபாநாயகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக – காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது

by admin

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  தலைமைச் செயலகம் எதிரே ராஜாஜி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து  ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்; பணம் வாங்கியதாக சட்டமன்ற உறுப்பினர்கள்  சரவணன் பேசிய வீடியோ குறித்து விவாதிக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதுடன் பதாகைகளை ஏந்தி திமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் சபாநாயகர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரை வெளியேற்ற உத்தரவிட்டதனையடுத்து அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்ட பெரும்பான்மை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் நீடித்த இந்த சாலை மறியலைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்;கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு அனைவரும் ராயபுரம் திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More