குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானமே இறுதியானது என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் யோசனையை ஏற்றுக் கொள்வதனைத் தவிர வேறு மாற்று வழி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல விடயங்களை சிறந்த முறையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பாவி நோயாளிகளை பணயக் கைதிகளைப் போன்று பயன்படுத்தியே அரச மருத்துவ அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் அணுகுமுறை வெறுக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வினை எட்ட அரசாங்கம் கதவுகளை திறந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.