இந்தியா

மும்பையில் காசநோய் பாதிப்பினால் தினந்தோறும் 18 பேர் உயிரிழக்கின்றனர் ?

மும்பையில் காசநோய் பாதிப்பினால் தினந்தோறும் 18 பேர் உயிரிழக்கின்றனர் எனவும்  சிகிச்சையில் இருந்து பாதியில் வெளியேறுவது அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரஜா என்ற தொண்டு நிறுவனம் இந்த  புதிய புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறையிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாக பிரஜா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும்  இந்த புள்ளி விவரங்களை மாநகராட்சி அதிகாரிகள் மறுத்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட சில தகவல்களை மட்டும் வைத்து சுகாதாரத் திட்டத்தை பகுப்பாய்வு செய்ய முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply