உலகம்

ட்ரம்பிற்கு வாக்களித்தவர்கள் தற்போது வருந்துகின்றனர்

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாக்களித்தமைக்காக வாக்களித்தவர்கள்  வருந்துகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற ஆய்வு மதிப்பீடு ஒன்றின் போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது. டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த எட்டு பேரில் ஒருவர் தமது தீர்மானத்தை மாற்றியிருக்க வேண்டுமென தற்போது வருந்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பெரும்பான்மையானவர்கள் ட்ரம்பிற்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ட்ரம்ப் இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் 2020ம் ஆண்டில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொய்ட்டர் செய்தி சேவை இது தொடர்பான கருத்துக் கணிப்பினை மேற்கொண்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply