185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பார்சிலோனாவில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 54 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பார்சிலோனாவின் பிரான்சியா ( Francia ) புகையிரத நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புகையிரதத்தின் ப்ரேக் உரிய முறையில் செயற்படாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் பிரான்ஸ் மற்றும் ரோமானிய பிரஜைகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love