ஐக்கிய அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்த அவர் நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காகவும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் பாராட்டத்தக்கவை என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மேற்கொள்ளும் வரலாற்றுரீதியான நடவடிக்கைகளின் வெற்றிக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதி, சமத்துவம், இன நல்லிணக்கம், சகவாழ்வு, அரசியலமைப்பு திருத்தங்கள், நிலையான சமாதானம் போன்ற அனைத்து துறைகளிலும் இலங்கை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் எலிஸ் வெல்ஸ் இத்ன் போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது