இந்தியா

இந்திய மத்திய தணிக்கை குழுவிற்கு புதிய தலைவர் பதவியேற்பு :

இந்தியாவின் மத்திய தணிக்கை குழுவின் புதிய தலைவராக ராஜுவ் மெஹ்ரிஷி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய தணிக்கை குழுவின் தலைவர் சஷி காந்த் சர்மாவின் பதவிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து முன்னாள் உள்துறை செயலராக பணியாற்றி வந்த ராஜுவ் மெஹ்ரிஷியை மத்திய தணிக்கை குழுவின் தலைவர் பதவிக்கு இந்திய மத்திய அரசு பரிந்துரை செய்தது.

இவர் 1978ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் கல்வியை நிறைவுசெய்தவர். இந்திய ஜனாதிபதி மாளிகையில் இன்று  நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத் துணை  தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply