குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரின் ரோஹினிய முஸ்லிம்கள் கொழும்பில் தங்கியிருந்த வீடு முற்றுகையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. 31 ரோஹினிய முஸ்லிம்கள் கல்கிஸ்ஸ பகுதியில் தங்கியிருந்த வீட்டை பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டிருந்தனர்.
இதனையடுத்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கை அதிகாரிகள், ரோஹினிய முஸ்லிம்கள் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்திருந்தனர். நிறுவனத்தின் இலங்கை அதிகாரிகளின் பாதுகாப்பு , அகதிகளின் பாதுகாப்பு போன்றன குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் கவனம் செலுத்தி வருவதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் படகு மூலம் இந்த ரோஹினிய முஸ்லிம்கள் இலங்கையை வந்டைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது