214
2017 ஆம் ஆண்டுக்கான தெற்காசியா நாடுகளின் சிறந்த மத்திய வங்கியின் ஆளுநராக, கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். குளோபல் கப்பிற்றல் (Global Capital ) பதிப்பகத்தால் இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் வோஷிங்டன் டி.சி.யில் இடம்பெற்ற விருது வழங்கல் மற்றும் உலக வங்கி – சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த ஒன்றுகூடலின்போது, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
இந்த விருதானது தெற்காசிய நாடுகளின் மத்திய வங்கி பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love