விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முதலாவது ஓருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் அணித் தலைவர் விராட் கொஹ்லி தனது 200ம் போட்டியில் 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் போல்ட் நான்கு விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் ரிம் லெடாம் 103 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 95 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்து  முன்னிலை வகின்றமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply