181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணம் செய்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 44 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மருதன்குளியயின் 10ம் மைல் கல்லுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது பேருந்து குடைசாய்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love