Home இலங்கை நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது – சி.தவராசா

நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது – சி.தவராசா

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது. அந் நியதிச் சட்டத்தின் கீழ் நிர்வாக செயற்பாட்டிற்கான ஒழுங்குமுறை விதிகள், தாபன விதிக்கோவைகள் என்பன ஆக்கப்படாமல் அவை பயன்பாடற்ற நியதிச்சட்டங்களாகவே இருக்கும். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி,தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
முதலமைச்சர் அவர்களால் 2018ஆம் ஆண்டிற்குரிய பாதீட்டு ஒதுக்கீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான உரையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இன்னும் ஓரிரு வருடங்களிற்குள் எமது மாகாணம் சிங்கப்பூராக மாறிவிடுவதைப் போன்ற ஒரு பிரமையில் இருந்தேன்.
அவரது உரையில் மத்திய அமைச்சுகளினால் எமது பிரதேசத்திற்குள் எமது அனுசரணையுடன் இல்லாது நடாத்தப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அவர்கள் செயற்படுவதற்குரிய காரணம் எமது அரசியலமைப்பில் இன்றுள்ள குறைபாடு. அதற்காகத்தான் எமக்கு வழங்கப்படும் அதிகாரங்களுக்குள் மத்திய அரசு தலையிடாத வகையிலும் அல்லது எம்முடைய அதிகாரங்களை மீளப் பெற முடியாத வகையிலும் புதிய அரசியலமைப்பு மாற்றம் வருவதற்குரிய முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதே வேளை எமக்குத் தரப்பட்டிருக்கின்ற அதிகார வரம்பிற்குள் நாம் செய்ய வேண்டியதனைச் சரியாகச் செய்து கொண்டிருக்கின்றோமா என்பதைப் பார்ப்போம்.
எமது பாதீட்டிற்கான மொத்த நிதியினை நிதி ஆணைக்குழுவானது அவர்களிற்கு வழங்கப்பட்ட பிரமாணத்தின் அடிப்படையில் சிபார்சு செய்யலாமே தவிர ஒவ்வொரு அமைச்சிற்கும், திணைக்களத்திற்கும் அவர்களிற்குரித்தான வேலைத்திட்டங்களிற்கு நிதியினைக் குறித்து ஒதுக்குவது அரசியலமைப்பிற்கு முரணானது என நான் ஒவ்வொரு வருடப் பாதீடு  ஒதுக்கீட்டு உரையிலும் குறிப்பிட்டு  வந்திருக்கின்றேன்.
இவ் விடயத்தினை முதலமைச்சர் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து இம் முறைமையினை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கடந்த முறையும் கேட்டிருந்தேன். இது தொடர்பாக ஒரு குறிப்பைத் தரும்படி கடந்த வருடம் கௌரவ முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் ஓர் குறிப்பையும் அவரிற்கு வழங்கியிருந்தேன். இது தொடர்பாக முதலமைச்சர் எவ்வித நடவடிக்கையையும் எடுத்ததாக எனக்குத் தெரியவில்லை.
எமது பாதீட்டிற்கான நிதியைப் பெற்று எமது மக்களின் தேவைக்காக செலவினம் செய்வது என்பது, ஏதோ அதிகாரிகள் கடிதம் எழுதுகின்றார்கள், அரசாங்கம் தருகின்றது அதனை நாங்கள் செலவழித்து விட்டோம் என்று மார்தட்டுவது அல்ல.  எமது மாகாணத்தின்  விசேட தேவைகளை அடையாளப்படுத்தி அவற்றை முன்னுரிமை அடிப்படையில் நிரற் படுத்தி நிதி அமைச்சரிற்கு அல்லது பிரதம மந்திரிக்குக் கடிதங்கள் மூலமும் நேரடியாகவும் அத் தேவைகளிற்கான நியாயப்பாட்டினை எடுத்தியம்புவதன் மூலமே எமது பிரதேசத்திற்கான விN~ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதியினை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
இது தொடர்பாக முதலமைச்சர் காரியாலயம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை அறிவதற்காக நான் 10.11.2017 இல் தகவலறியும் சட்டத்தின் கீழ் “வடக்;கு மாகாண சபையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய பாதீடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சரிற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள், அறிக்கைகள் மற்றும் ஆவணங்களின் பிரதிகளினை” வழங்கும் வண்ணம் கேட்டிருந்தேன்.
அதற்கு எனக்கு முதலமைச்சர் காரியாலயத்திலிருந்து கிடைத்த பதில் “வடக்கு மாகாண சபையினது பாதீடு தொடர்பாக மத்திய நிதி அமைச்சிற்கு ஃ அமைச்சரிற்கு எமது அமைச்சினால் எவ்விதமான கடிதங்களோ அல்லது அறிக்கைகளோ அனுப்பப்படவில்லை என்பதுடன், பொதுவாக மத்திய நிதி அமைச்சுடன் நேரடியான தொடர்பாடல்களெதுவும் எம்மால் மேற்கொள்ளப்படவில்லை என்பதனையும் தங்களிற்கு அறியத் தருகின்றேன்” எனப் பதில் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரதம செயலாளரிற்கு இதே போன்ற ஓர் கேரிக்கையினைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அனுப்பியிருந்தேன். பிரதம செயலாளர் அலுவலகம் சகல துறைசார் அலகுகள் ஊடாக பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில் தங்களினால் தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தொகுப்பை எனக்கு அனுப்பிவைத்திருந்தார்கள். அது துறைசார் அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட ஆவணமே தவிர நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியல் தலைமைப் பீடத்தின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை.
எதற்கும் எனக்கு ஓர் சந்தேகம்; இருந்தது முதலமைச்சர் அவர்கள் இவ்வாறான ஓர் பாதீட்டுக் கோரிக்கையை அனுப்புங்கள் என்ற பணிப்புரையினை பிரதம செயலாளரிற்கு வழங்கி அதன் அடிப்படையிலேயா அவை தயாரிக்கப் பட்டிருக்கலாம் என்று. மீண்டும் முதலமைச்சர் அலுவலகத்திற்கு இது தொடர்பாக தங்கள் அலுவலகத்தினால் பிரதம செயலாளரிற்கு வழங்கப்பட்ட பணிப்புரை என்னவென்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தேன்.
அதற்கான பதிலில் அவர்களுடைய அலுவலகம் மொத்தமாக மீண்டு வரும் செலவினத்திற்காக 68 மில்லியன் ரூபாவும்;, மூலதன செலவினமாக 138 மில்லியன் ரூபாவும் கோரப்பட்டிருப்பதாக அறியத் தந்திருக்கின்றார்கள். இது முதலமைச்சரின் அமைச்சின் கீழ் வருகின்ற அலகுகளிற்காக அவரது அமைச்சினால் கோரப்பட்ட நிதிக்கோரிக்கை.
 இங்கு எங்களிற்கு வழங்கப்பட்டிருக்கும் நிதிக் கூற்று அறிக்கையைப் பார்த்தீர்களேயானால் கௌரவ அவைத் தலைவர் அவர்களே முதலமைச்சரின் அமைச்சினால் கோரப்பட்ட நிதியானது முதலமைச்சரிற்கும் அவரினது  பிரத்தியேக உதவியாளர்களிற்கும் கோரப்பட்ட மூலதன செலவினம் 6 மில்லியனைத் தவிர மிகுதி அவ்வளவும் அரசினால் கொடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு நாங்கள் கூற முடியும் நாம் கேட்ட நிதியினை அரசு தருவதில்லையென்று.
எமது மக்களிற்கு வேண்டிய விN~ட தேவைகளிற்கான நிதியினை அவற்றிற்கான நியாயப்பாட்டுடன் அரசியல் ரீதியாக அமைச்சர்களுடன் பேசிக் குறிப்பாக நிதி அமைச்சர் மற்றும் பிரதம மந்திரியுடன் பேசி அதன் பின்பு அதிகாரிகள் ஊடாக எமது கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.
மக்களின் நலனில் உண்மையான அக்கறை இருக்குமேயானால் அதுவே செய்ய வேண்டிய படிமுறை. ஒரு கௌரவ உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஒரு தனிமனிதனாக மத்திய நிதி அமைச்சரிடம் சென்று ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாகக் கட்டப்படும் நீச்சல் தடாகத்திற்கு 8 கோடி ரூபா பெற்றுக் கொள்ளமுடியுமானால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சராகவும், பதவிகளிற்காககப் போட்டிபோட்டு அமைச்சர்களாக இருக்கும் உங்களால் ஏன் அதனைச் சாதிக்க முடியவில்லை.
உண்மையிலே அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரிவர செய்திருக்கின்றார்கள். அவர்களினால் நிதி அமைச்சிற்கு அனுப்பப்பட்டதாக எனக்கு அனுப்பப்பட்ட மாகாணத்திற்கான மூலதன நிதித் தேவையாக 10,310 மில்லியன் ரூபா கோரிக்கை விடுத்துள்ளார்கள். அவர்களினால்  துறை ரீதியாகவும், முன்னுரிமை அடிப்படையிலும் அந்தக் கோரிக்கைகள் விடப்பட்டிருந்தும், அந்தக் கோரிக்கைகளின் விN~ட தேவைக்கான அல்லது மேலதிக தேவைக்கான நியாயப்பாடுகள் எதுவும் அங்கு இல்லை. அதைச் செய்ய வேண்டியவர்கள் அரசியல் தலைமைப் பீடமே அன்றி அதிகாரிகளல்ல. நாங்கள் எங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் விட்டு விட்டு அரசு பணம் தருவதில்லையெனக் கூச்சலிடுவதில் எவ்வித பலனும் இல்லை.
இவ் விடயத்தில் இன்னுமொரு முக்கியமான விடயத்தினைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (யுனுடீ) நிதிப்பங்களிப்புடன் செயற்படுத்தப்படும் ஐறோட் pசழதநஉவ என அழைக்கப்படும் தெருக்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தில் வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான  வேலைத்திட்டங்கள் முறையே 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் அமுல்படுத்தப்படவிருந்தது. வடக்கு மாகாணத்தில் இத் திட்டத்தின் கீழ் 585.37கி.மீ நீளமான 122 வீதிகள் புனரமைக்கப்படவிருந்தது.
அதற்கான கேள்விக் கோரல்கள் இவ்வருட இறுதியில் கோரப்பட இருந்தது. ஆனால்  ஐறோட் pசழதநஉவ சம்பந்தமாக கொழும்பில் நடைபெற்ற  கூட்டங்களில் ஏனைய மாகாணங்களிலிருந்து அரசியற் தலைமைகள் பங்குபற்றிய அதே வேளையில், எமது அரசியற் தலைமைகள் பதவிப் பங்கீடுகளில்  தங்கள் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார்களேயன்றி அக்கூட்டங்களில் அரசியற் தலைமைகளெதுவும் பங்குபற்றாததன் விளைவு எமது மாகாணத்தில் இத்திட்டத்தின் கீழான செயற்பாடுகள் 2020ஆம் ஆண்டிற்குப் பிற்போடப்பட்டு ஏனைய இரு மாகாணங்களும் முன்னிலைக்கு வந்துள்ளன.
அரசாங்கத்தின் தேசிய வரவு செலவுத்திட்டத்தினை எடுத்துக் கொண்டால் துறைசார் அமைச்சுகளினால் 2018இல் செயற்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்களிற்கு மேலாக பாரிய திட்டங்களாக 50,000 கல்வீட்டுத் திட்டங்களும், ஏறத்தாழ அமெரிக்க டொலர் 600-700 மில்லியனிற்கான வீதி அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இத்திட்டங்களின் பெரும்பகுதி வட மாகாணத்திற்கு வரக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
இதற்கு மேலாக ஏறத்தாழ 8,370 மில்லியன் ரூபாய்கள் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக விN~டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அவ் வேலைத்திட்டங்களை ஆராய்ந்து பார்;ப்பீர்களேயானால் அவற்றுள் பெரும்பாலனவை மாகாண சபையின் விடயப் பரப்பிற்குள் அடங்குகின்றது. இவ்வாறான முன்மொழிவுகள் வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் துறைசார் மேற்பார்வைக் குழுவிலும் (ளுநஉவழசயட ழுஎநசளiபாவ ஊழஅஅவைவநந) பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதன் விளைவே.
அதிகூடிய அதிகாரப்பகிர்வு வேண்டும், சம~;டி வேண்டும் என்றெல்லாம் கோ~மிடுகின்றோம். இந்த ஓர் சிறிய விடயத்தையே செய்யத் திறமையற்றவர்களாக இருந்து கொண்டு கோ~மிடுவதில் எந்தவித பயனுமில்லை.
அரசிலிருந்து நிதி பெறும் விடயத்தில் மட்டுமல்ல எம்மை நோக்கிவருகின்ற வெளிநாட்டு முதலீடுகளையும் தடுப்பதிலே நாம் வல்லுநர்களாக இருக்கின்றோம். உதாரணத்திற்கு கடல் நீரை நன்னீராக்கி அதனை பருத்தித்துறை, வல்வெட்டித்துறைப் பகுதிகளிற்கு விநியோகம் செய்ய ஒரு தனியாரினால் எடுக்கப்பட்ட முயற்சி இன்று எமது முதலமைச்சரினால் முடக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது. ஏறத்தாழ 32 மில்லியன் அமெரிக்க டொலரில் இந்தத் திட்டம் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையில், மருதங்கேணி பிரதேச செயலாளரினால் தடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளரிடம் ஏன் அவ்வாறு தடுத்துள்ளீர்களென்று நான் வினவியதற்கு அவரால் எனக்குக் கூறப்பட்ட பதில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களினால் அவ்வாறு கோரப்பட்டதாக,
அது தொடர்பாக அபிவிருத்திக் குழுக் கூட்ட அறிக்கையினைப் பார்த்ததில், “கொள்கை ரீதியாக தனியாரினால் நீரினை வழங்கும் செயற்பாட்டினை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை” என கௌரவ முதலமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டதெனவும், அதனைத் தொடர்ந்து கௌரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களினால்;; “இதற்கு முன்பும் விவசாய அமைச்சர் என்ற ரீதியில் தன்னிடம் ஒத்துழைப்புக் கேட்டு தனி ஒருவர் அணுகியதாகவும் அவரிற்குத் தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது எனக் கூறியதாகவும்  எனினும் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டத்திற்கு அதிக செலவு ஏற்பட்டாலும் கொழும்பு விலைக்கே நீரினை வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் எம்மால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளதெனவும், எனினும் தண்ணீரினை தனியார் மயப்படுத்துவது மனித உரிமைக்கு எதிரானதெனவும்” தெரிவித்ததாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நான் ஒன்றைக் கூறி வைக்க விரும்புகின்றேன். முதலில் கொள்கை ரீதியாகத் தனியாரினால் கடல் நீரினை நன்னீராக்கும் செயற்பாட்டினைத் தாம் ஏற்றுக் கொள்ளவில்;லையென்று முதலமைச்சர் கூறியிருப்பது எமது நிலத்திற்கு அடியில் இருக்கும் நீரினை ஒரு தனியார் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவாரேயானால் நிச்சயமாக நானும் கௌரவ முதலமைச்சர் அவர்களின் கருத்துடன் ஒத்துப் போயிருப்பேன்.
 ஆனால் இத்திட்டம் 32 மில்லியன் அமரிக்க டொலர் செலவில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், அதாவது உலகின் நிலப்பரப்பின் 2ஃ3 பகுதியைத் தன்வசம் கொண்டிருக்கும் அள்ள அள்ள வற்றாத கடல் நீரை நன்னீராக்கும் திட்டம். அது மட்டுமல்ல, அத் திட்டத்தினால் வெளியேறும் கழிவு நீர் முற்றாகக் கடலில் செல்லாமல் அதிலிருந்து உப்பை உற்பத்தி செய்வதற்கும் அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். அவ்வாறு உற்பத்தியாகும் நீரில் 80 வீதத்தினையே அரசு, அதாவது நீர் வழங்கல் அதிகார சபை, வாங்குவதற்குத் தயாரக உள்ளதால் மிகுதி 20 வீதத்தினையும் போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கு தாங்கள் உத்தேசித்துள்ளதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.
இதில் என்ன தவறு உள்ளது? எமது சுற்றுச் சூழல் சட்டத்திற்கு அமைய அதாவது நுஐயு எனப்படுகின்ற சுற்றுச் சூழலிற்காகன பாதிப்பு அறிக்கைக்கு அமைவாக அவ்வாறு ஒரு செயற்பாடு அமைவதில் என்ன தவறுள்ளதென  எனக்கு  விளங்கவில்லை. இவ்வாறு நாம் தடையாக இருந்தோமேயானால் ஒரு முதலீட்டாளரும் வடமாகாணத்திற்காக முதலீடு செய்வதற்கு வர மாட்டார்கள்.
இனி நான் உறுப்பினர் ஐங்கரநேசனின் தண்ணீரினைத் தனியார் மயப்படுத்துவது மனித உரிமைக்கு எதிரானது என்ற விடயத்திற்கு வருகின்றேன். நீர் ஓர் மனிதனின் அடிப்படை உரிமை என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் அடிப்படை உரிமை என்றால் என்ன என்பதில் அவரிற்கு நான் சிறிது விளங்க வைக்க விரும்புகின்றேன்.
மனிதக் குடியிருப்புகள் குடியிருக்கும் இடத்திற்கு நீர் வழங்க வேண்டியது அரசின் கடமை. இதுவே அக் குடியிருப்பில் உள்ளவர்களிற்கான அடிப்படை உரிமை. அதற்காக அந் நீரை இலவசமாக வழங்கவேண்டுமென்ற நியதி இல்லை. இதனை சரியாக ஆங்கிலத்தில் சொல்வதானால்; “யுஉஉநளள வழ றயவநச ளை ய கரனெயஅநவெயட சுiபாவ் ஐவ னழநள ழெவ அநயn வை hயள வழ டிந pசழஎனைநன கசநந ழக உhயசபந”.  ஆதலினால் இவ்வாறான திட்டத்தினை அங்கீகரிப்பது மனித உரிமை மீறலான செயல் அல்ல. உண்மையிலேயே இது நீரின் அடிப்படை உரிமையினை மதிக்கின்ற அல்லது செயற்படுத்துகின்ற ஓர் திட்டம் என்பதனை ஐங்கரநேசன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் அவர்களை நிராகரித்திருக்கின்றீர்கள், ஆனால் அம் முதலீட்hளர்களே அம்பாந்தோட்டையில் அவ்வாறான ஓர் திட்டத்தை மேற்கொள்வதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று அதற்கான வேலைத்திட்டங்களில் தற்போது ஈடுபட்டுள்ளனர். எமக்குக் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகளைத் தெற்கிற்கு அனுப்பினோம் என்ற சரித்திரம் படைத்த மகாகண சபையாக இந்த மாகாகண சபை அமையப் போகின்றது என்பதனை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இவ்வாறே எமது பிரதேசத்தை நோக்கிவரும் ஒவ்வொரு முதலீட்டு வாய்ப்புகளையும் சுற்றுச் சூழல், அடிப்படை உரிமைகள் என்று நாங்கள் தட்டிக் கழித்துக் கொண்டு போனால் எமது பிரதேசம் எப்போது அபிவிருத்தி காணப் போகின்றது. இன்று வடக்கில் மட்டும் வேலை இல்லாமல் இருக்கும் ஏறத்தாழ 75,000 இளம் சமுதாயத்;;தினரிற்கு   நாம் என்ன ஏற்பாடு  செய்துள்ளோம் அல்லது என்ன செய்யப் போகின்றோம்.
இன்று இலங்கையின் வேலையற்றோரின் வீதாசாரம் 4.4 ஆக இருக்கும் போது வட மாகாணத்தின் வேலையற்றோர் 6.3 வீதமாகவும், அதிலும் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் வேலையற்றோர் 7 வீதமாகவும் கணப்படுகின்றது. இவ்வாறே நாங்கள் முதலீடுகளையும் தடுத்துக் கொண்டே போனால் அது எங்களை எங்கே கொண்டு போய் விடும்? நாங்கள்தான் எதையும் செய்யாமலிருப்பது மட்டுமல்ல செய்ய முன் வருகின்றவர்களையும் ஏன் தடுக்கின்றோம் என எனக்குப் புரியவில்லை.
இதே போன்றுதான் இரணைமடு நீரினை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரவிருந்த பாரிய வேலைத்திட்டத்தினை நிபுணர்கள் என்ற சிலரைக் கொண்டு உங்களிற்கு வேண்டியவாறு அறிக்கையினைத் தயாரித்து இன்றைக்கு அத்திட்டத்தின் முக்கிய வேலைத்திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. அத் திட்டத்தின் கீழ் எமது மாநகர சபையின் கழிவு நீர் அகற்றும் பாரிய திட்டமொன்றும் இருந்தது. ஆனால் நாங்கள் அத் திட்டத்தினையே குழப்பியதன் விளைவு இன்று அக் கழிவு நீர் அகற்றும் திட்டத்திற்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் யுகுனு என்ற நிறுவனம் “நீங்கள் தண்ணியைக் கொண்டு வந்து காட்டினால் உதவி செய்வதாகக்” கூறியுள்ளார்கள். நீங்கள் தொடர்ந்து தண்ணி காட்டிக் கொண்டே இருக்கின்றீர்கள்.
2014இல் இத் திட்டத்தினை நீங்கள் தடுக்காமல் இருந்திருந்தால் இத் திட்டங்களில் பெரும்பான்மையானவை இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு  யாழ் மாநகர சபை இன்று ஓர் சுத்தமான மாநகர சபையாக இருந்திருக்கும்.
இனி இன்னொரு விடயத்திற்கு வருகின்றேன், நிர்வாக ரீதியாக நிறைவேற்றுச் செயற்பாட்டாளர்களான முதலமைச்சரும், நிதிச் செயற்பாடுகளை அமுல் படுத்துவதற்கும், அமைச்சரவையும் தங்கள் விடயப் பரப்பின் கீழ் வரும் உத்தியோகத்தர்களை நெறிப்படுத்துவதற்கும் சட்ட ரீதியான வலுவைக் கொடுப்பது, நியதிச் சட்டங்கள் ஆகும். இதனை விளங்க வைப்பதற்கு நான் ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன்.
அண்மையில் நான் எனது பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து வாங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை விளையாட்டுக் கழகங்களிற்கு வழங்குவதற்காக ஓர் பிரதேச செயலகத்திற்குச் சென்றிருந்தேன். அன்று அந்தப் பிரதேச செயலகத்தில் விளையாட்டுக்கழகங்களைப் பதிவது தொடர்பான நெறியாள்கைக் கூட்டத்திற்குப் பிரதேச செயலாளரினால்; சகல விளையாட்டுக் கழகங்களும் அழைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகளாக பிரதேச செயலரும், செயலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், மாகாணத்திலிருந்து விளையாட்டுத் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளரும், விளையாட்டு உத்தியோகத்தரும் பங்குபற்றியிருந்தனர்.
உண்மையில் இது முழுக்க முழுக்க மாகாகண சபைக்குரிய விடயம், ஆனால் இது தொடர்பான நியதிச் சட்டங்களை உருவாக்கி விளையாட்டுக் கழகங்களைப் பதிவு செய்து நெறிப்படுத்துவதற்கான நியதிச் சட்டத்தை நாம் நான்கு வருடங்களாக ஆக்காததன் விளைவுதான் இது. இதே போல்தான் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற்துறை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலர்களின் நெறியாள்கையின் கீழ் செயற்படுகிறார்கள்.
ஆனால் அவர்களிற்குரிய ஊதியத்திற்கான பாதீட்டை இங்கு நாங்கள் அங்கீகரிக்கின்றோம். இது நான்கு வருட எமது செயற்பாடின்மையின் விளைவு. சட்ட வரைஞர் பிரிவொன்று மாகாகண சபையில் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஆளணி வழங்காமையின் விளைவே இது என்று இவ்வியலாமையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயற்சிக்கலாம். ஆனால்,  அரசாங்கம் இதற்குரிய ஆளணியினை வழங்காவிட்டாலும் சில வெளிநாட்டு அரசுகளும், சர்வதேச  நிறுவனங்களும் இதற்காக தனியாரின் சேவையைப் பெறுவற்கு எமக்கு உதவ முன்வந்தன. ஆனால் நாம் அவை எவற்றையும் சரியாகப் பயன்படுத்தவில்லை.
நியதிச் சட்டம் விடயமாக இன்னொரு விடயத்தைக் கூறி வைக்க விரும்புகின்றேன், கௌரவ அவைத் தலைவர் அவர்களே, நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது. அந் நியதிச் சட்டத்தின் கீழ் நிர்வாக செயற்பாட்டிற்கான ஒழுங்குமுறை விதிகள், தாபன விதிக்கோவைகள் என்பன ஆக்கப்படாமல் அவை பயன்பாடற்ற நியதிச்சட்டங்களாகவே இருக்கும். இன்று சுகாதர மற்றும் கல்வி நியதிச் சட்டங்கள் ஆக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டு வருடங்களாகின்றன.
இன்னும் அந் நியதிச் சட்டங்களிற்குக் கீழான சுற்றறிக்கைகளோ, விதிமுறைக் கோவைகளோ ஆக்கப்படவில்லை. முன்பள்ளி நியதிச்சட்டம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலைய நியதிச்சட்டம் ஆக்கப்பட்டு இன்று ஒரு வருடத்திற்கு மேலாகின்றது. ஆனால் முன்பள்ளிகளையோ, சிறுவர் பராமரிப்பு நிலையங்களையோ பதிவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகள் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. இவ்வாறே என்னால் அடுக்கிக் கொண்டு போக முடியும்.
அடுத்து, முதலமைச்சரின் கீழுள்ள சட்டம் ஒழுங்கு என்ற விடயம் தொடர்பாகக் கூற விரும்புகின்றேன். வட மாகாணத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் அல்லது பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரே~;ட பொலிஸ் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டங்களின் அறிக்கைகளைத் தரும்படி 20.11.2017ஆம் திகியன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் அலுவலகத்திற்குக் கோரிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தேன்.
அக் கோரிக்கையினை அனுப்பி இன்று 21 நாட்கள் ஆகின்றது. இது தொடர்பாக 14 நாட்கள் கடந்த நிலையில் நினைவூட்டற் கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன். அதற்கு எனக்குக் கிடைத்திருக்கும் பதிலில் 14 நாட்களிற்குள் தேவையான தகவல் உங்களிற்குக் கிடைக்காவிடின் அந்தக் காலம் முடிவடைந்து இரண்டு வாரங்களிற்குள் கீழ்க்குறிப்பிட்ட பெயருடைய அலுவலரிற்கு சுவுஐ10 அல்லது கடிதத்தின் மூலம் மேன் முறையீடு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து என்னால் புரிந்து கொள்ளக் கூடியது சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் நான் கேட்ட காலப்பகுதி வரை எவ்வித முனைப்புகளும் உத்தியோகபூர்வமாக நடைபெறவில்லையென்று.
இத் தருணத்தில் கௌரவ முதலமைச்சர் அவர்களை நான் வேண்டிக் கொள்வது,  யாழ்ப்பாணத்தில் கோயில் திருவிழாக்காலங்களில் அதாவது பங்குனியிலிருந்து ஆவணி வரை தவில் மற்றும் நாதஸ்வரம் வாசிப்பவர்களை சுற்றுலா விசாவில் சிலர் கொண்டு வந்து குறைந்த கட்டணத்தில் கோயில்களிற்கு தவில் நாதஸ்வரம் வாசிப்பதற்குக் கலைஞர்களை வழங்கி வருகின்றார்கள். இதனால் உள்@ர் கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள். சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பான பணிப்புரையினை வழங்கி சுற்றுலா விசாவில் வந்து இவ்வாறு தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
அண்மையில் தீவுப் பகுதியில் இவ்வாறு சுற்றுலா விசாவில் வந்து புடைவை வியாபரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தரமான கலைஞர்கள் அதற்குரிய விசாவினை முறையாகப் பெற்று எம் பிரதேசத்திற்கு வந்து கலை நிகழ்ச்சியில் பங்குபற்றுவதை நான் எதிர்க்கவில்லை என்பதனைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.
கௌரவ முதலமைச்சர் அவர்களின் கீழ்வருகின்ற உள்@ராட்சி சபைகளில் ஒன்றான யாழ் மாநகர சபையில் ஏறத்தாழ 29 இலட்சத்தை முறைகேடாகக் கையாண்ட பெண் உத்தியோகத்தர் ஒருவர் இன்று சுதந்திராமாக நடமாடுகின்றார். முதலைமைச்சரைப் பார்த்துக் கூறுகின்றேன் நீங்கள்தான் சட்டம் ஒழுங்கு அமைச்சர், நீங்கள்தான் உள்@ராட்சி அமைச்சர், ஏன் எது வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாழ் மாநகர சபையில் உள்ள உயர்மட்ட அதிகாரி ஒருவர் இவ் உத்தியோக்ததரிற்கு உதவி செய்து பாதுகாத்து வருவதாகப் பலரும் பேசுகின்றனர்.
இதே போல்தான் “நெல்சிப்பும்”. இதில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பான விசராரணக் குழு அறிக்கையினைத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட போது பொது நிர்வாக அமைச்சிற்கு சட்ட நடிவடிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அகில இலங்கைச் சேவையினை, அதாவது யுடட ஐளடயனெ ளுநசஎiஉந ஐச் சேர்ந்தவர்களிற்கு, எதிராக நடவடிக்கை எடுபபவர்களிற்கே பொது நிர்வாக அமைச்சிற்கு அறிவிக்க வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாவரும் அகில இலங்கை நிர்வாக சேவை தரத்தைச் சேர்ந்தவர்களா? ஓர் பாரிய மோசடி இவ்வாறாக ஏன் மூடி மறைக்கப்படுகின்றது  என எனக்கு விளங்கவில்லை.
இவ்வாறான மோசடிகள் வருங்காலத்தில் நடைபெறாமலிருப்பதற்கு உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு வலுவூட்டப்படல் வேண்டும். அது மட்டுமல்ல அது சுயாதீனமாக இயங்குவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இது தொடர்பான நிதி ஒழுங்கு விதிகள் பிரிவு குசு 134(1)இல் உள்ளதை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
“ஒரு திணைக்களத்தின் நிதி சம்பந்தமான வேலைகளையும், கணக்கீட்டு வேலைகளையும் உண்மையில் நடாத்துபவரினது அல்லது நடாத்துபவரிற்கு பொறுப்பாயிருப்பவரினது கட்டுப்பாட்டினின்று குறித்த திணைக்களத்தினால் அளிக்கப்படும் வேலைகளையும், சேவைகளையும் ஆற்றுவதிலும் திட்டங்களையும் முயற்சிகளையும் நிறைவேற்றுவதிலும் ஈடுபட்டு இருப்போரினது கட்டுப்பாட்டிலிருந்தும் உள்ளகக் கணக்குப் பரிசோதனைக் கூறு சுதந்திரம் பெற்றிருத்தல் வேண்டும்.”
இன்று மாகாணத்தின் ஊhநைக யுஉஉழரவெiபெ ழுககiஉநச பிரதம செயலாளர். அவரின் கீழ்தான் உள்ளகக் கணக்காய்வு உள்ளது. இது கணக்காய்வின் சுயாதீனத் தன்மைக்குப் பாதகமானது. நான் இவ்வாறு கூறுவது தற்போதைய பிரதம செயலாளர் மீது குறை கூறுவதாக எவரும் நினைத்திட வேண்டாம். நான்  இதனை ஓர் கொள்கை அடிப்படையிலேயே கூறுகின்றேனே தவிர ஓர் குறிப்பிட்ட நபர் சார்ந்து கூறவில்லை என தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன். உள்ளகக் கணக்காய்வுக்குழு சுயாதீனமாகவும், வலுவுள்ளதாகவும் இருந்திருந்தால் “நெல்சிப்” முறைகேடு நடைபெற வாய்ப்பு இருந்திருக்காது. ஆதலினால் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு மாகாண சபைக்கு நேரடியாகப் பொறுப்புக் கூறக் கூடிய வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More