குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் காரியாலயத்தில் பணியாற்றும் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். எளிய அமைப்பினால் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலவந்த தடுத்து வைப்புக்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை பயணம்; செய்திருந்த போது, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீ.கே.பீ தசாநாயக்கவின் புதல்வி அவர்களை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். புலிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.