குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200க்கும் மேலாக அதிகரித்துள்ளது. கடுமையான மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இந்த உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை நெருங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்டானோ ( Mindanao )தீவுப் பகுதியில் அதிகளவான சேதங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிர் இழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழப்பு
Dec 23, 2017 @ 08:02
பிலிப்பைன்சின் தென்பகுதியை தாக்கிய புயலால் ஏற்பட்ட கனமழை , வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் தாக்கிய தாக்கிய டெம்பின் என பெயரிடப்பட்ட புயல் மிண்டானாவ் தீவில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.
மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன காரணமாக தாழ்வான பகுதியில் குடியிருந்த சுமார் 12 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் பிலிப்பைன்சினைத் தாக்கிய மற்றொரு புயல் காரணமாக 46 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.