குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சவானி கடந்த 5ஆண்டுகளாக தந்தையை இழந்து வறுமையில் வாடும் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறார். இந்நிலையில், 251 தந்தையை இழந்த பெண்களுக்கு, சவானி, நேற்று (24.12.17) ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார். மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், சாதி, மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினருக்கும் அவரவர் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
251 மணப்பெண்களில் 108 பெண்களுக்கு சவானி குடும்பத்தினர் கன்னியாதானம் செய்து வைத்தனர். ஒரே சமயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பெண்களுக்கும் 5 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
தந்தை இல்லாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக சவானி கூறியுள்ர்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 824 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள இவர் மேலும், 1300 பேருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.