140
இலங்கையில் அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள இந்தியா எதிர்வரும் காலத்தில் இருநாடுகளுக்குமிடையிலான உறவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்க்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும் அயல் நாடான இலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஸ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றப் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love