ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா போன்ற பலரும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பிப்ரவரியில் வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.