குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த அரசாங்கத்தில் பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பயணத்தை தடுத்து நிறுத்த இந்த தரப்பினருக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அனைவருக்கும் பாடம் நடத்தத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவரேனும் இந்த அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சி அரசாங்கம் என்று கூறினால் அது முட்டாள்தனமானது ஏனெனில் இந்த அரசாங்கத்தை உருவாக்க நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தோம் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.