சினிமா

தற்போது விஜய் படத்தில் அடுத்து, அஜித் படத்தில் கலக்கப்போகும் யோகி பாபு


தமிழ் சினிமாவில் அண்மைய காலத்தின் தன் நகைச்சுவை நடிப்பால் கவனத்தை ஈர்த்து வருவர் யோகி பாபு. இவர் தற்போது விஜய் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருவதுடன் அடுத்து, சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் நகைச்சுவையில் கலக்க இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா மூலம் தன் பயணத்தை தொடங்கியவர் யோகி பாபு. சுப்ரமணியம் சிவா இயக்கிய ‘யோகி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் பாபு.  இப்படம் சிறந்த அறிமுகமாக அவருக்கு அமையால் போனமையால் அப்படத்திற்கு பின்னர் தன் பெயரை யோகி பாபு என மாற்றிக் கொண்டார்.

அதன் பின்னர் வந்த ‘கலகலப்பு’, ‘பட்டத்து யானை’, ‘மான் கராத்தே’, ‘யாமிருக்க பயமேன்’, ‘ரெமோ’ உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு கவனத்தை ஈர்த்தது.  யோகி பாபு ஒரு காட்சியில் இருந்தால் போதும் என்று பல இயக்குனர்கள் அவரை அணுகி வருகிறார்கள். வடிவேலுக்குப் பின்னர் உடல்மொழியால் பார்வையால் நகைச்சுவையை அள்ளிக் கொட்டுகிறார் யோகிபாபு என்ற நிலை எழுந்துள்ளது.

அத்துடன் எல்லா இயக்குனர்களுக்கும் தேவையான – ஒரு படத்திற்கான நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது விஜய்யுடன் ‘தளபதி 62’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இப்படம் யோகி பாபுக்கு 100வது படமாகும். இதையறிந்த ரசிகர்கள் பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.