Home இலங்கை மஸ்தான் இந்து சமயத்தை விலக்குகிறார்…

மஸ்தான் இந்து சமயத்தை விலக்குகிறார்…

by admin


வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12.06.18) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தான், தான் வகிக்கும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில், இன்று (14.06.18) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், அவர் இந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வாரெனத், தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை நியமிக்கும் போது, இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டார். இதனால், தமிழர் தரப்பில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளைத் தொடர்ந்து, அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது. தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்துமத விவகாரப் பிரதியமைச்சுப் பதவியை இராஜினாமான செய்த பின், வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கான பிரதியமைச்சராக, மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More