முதியோர் கல்வி திட்டத்தில் கல்வி கற்று 96ஆவது வயதில் கேரன மூதாட்டி ஒருவர் ஆர்வமுடன் பரீட்சை எழுதியுள்ளார். கல்விக்கு வயதில்லை என்ற நற் சிந்தனைக்கு முன்னுதாரணமாக இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் கேரள மாநிலத்தில் முதியோர் கல்வித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான பரீட்சையை மாநிலம் முழுவதும் உள்ள 40 ஆயிரம் முதியோர் எழுதியுள்ளனர். இதில் செப்பேடு, கனிச்சநல்லூர், அரசு தொடக்கப் பாடசாலையில் கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயது மூதாட்டி பரீட்சை எழுதியுள்ளார். இவர் இப் பரீட்சையை எழுதியவர்களில் அதிக வயது உடையவர் ஆவார்.
பரீட்சை மண்டபத்தில் கார்த்தியாயினி அம்மா பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது அவருக்கருகில் ராமச்சந்திரன் என்ற 76 வயது முதியவரும் பரீட்சை எழுதியுள்ளார். அவர் கார்த்தியாயினி அம்மாவின் விடைத்தாளை பார்த்து எழுதியமையால் பரீட்சை கண்காணிப்பாளர் பார்த்து கண்டித்தார்.