தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வாக இருக்குமென்று கருதுகின்ற தீர்வை நாங்கள் ஆதரிப்போம். அவ்வாறு இல்லாவிடின் அதனை நாங்கள் எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வே எமக்கு வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம். ஏனென்றால் இருக்கின்ற இந்த நிலையில் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருப்போம் பேசிக் கொண்டிருப்போம் என்று கூறி கடந்த எழுபது வருடமாக நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைப் போன்று இனியும் நாங்கள் பேசிக் கொண்டிருக்க முடியாது.
அப்படி சென்று கொண்டிருப்பது இனத்திற்கும் நல்லதல்ல. இதை இப்படியே பேசிப் பேசி கொண்டிருக்க முடியாது. ஆனால் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பதையே சிங்களத் தலைமைகள் சில வேளை விரும்பலாம்.
ஏனென்றால் கடந்த 70 வருடத்திற்கு முன்னராக இருந்தே பேசிக் கொண்டு வருகின்றோம். அவ்வாறு நாங்கள் பேசத் தொடங்கிய காலத்திற்கும் இன்றைய காலத்திற்குமிடையே எவ்வளவோ நாங்கள் பலவீனமாகி விட்டோம் குறிப்பாக ஆயதப் போராட்ட காலத்திற்கும் இப்ப இருக்கின்ற காலத்திற்கும் இடையிலே கூட நாங்கள் மிகவும் பலவீனமாகவே உள்ளோம்.
ஆகவே இந்த நிலைமையை தொடர தொடர்ந்தும் விட்டுக் கொண்டிருப்போமேயானால் இன்னும் பலவீனமாகவே நாம் இருப்போம். இதனால் தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு நியாயயமான தீர்வு வேண்டும். அதாவது எங்களுடைய பகுதிகளிலே நாங்களே எங்கள் அலுவல்களைப் பார்க்கக் கூடியதாக கொடுத்த அதிகாரங்களை மிளப் பறிக்க முடியாதவாறான நிலையில் ஒரு தீர்வை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் அப்படியானதொரு தீர்வுவருமமா என்பது கேள்விக்குறி தான். ஏனென்றால் 87 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து மாகாண சபை முறைமையை எல்லாம் எதிர்த்தோம். இன்று நாங்கள் அதற்காக எங்களுக்குள்ளேயே அதன் முதலமைச்சர் யார், அமைச்சர்கள் யார் என்று போட்டி போடுகின்றோம். ஆகவே பலர் சொல்வது போல் அன்றே அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டு இன்னும் பலப்படுத்தியிருக்கலாம். அதனை ராஜீவ் காந்தி இருந்த காலத்தில் செய்திருக்கலாம்.
1 comment
தீர்வில் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக செய்ய முடியாதவையாக இருக்க வேண்டியவை:
1. மாகாண மக்களின் தினசரி வாழ்க்கை விடயங்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவது.
2. மாகாண சட்டவாக்கல் அதிகாரத்தை மீறி சட்டங்களை இயற்றுவது.
3. மாகாணத்திற்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை மீளப் பெறுவது.
4. தேசிய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது.
மேலே கூறியவை உள்ள தீர்வை ஏற்கலாம்.