156
குளோபல் தமிழச் செய்தியாளர்
யாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
அரியாலை பூம்புகார் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய அப்பகுதி இளைஞர் ஒருவரை தாம் சந்தேகத்தில் சோதனையிட்ட போது அவரது உடமையில் இருந்து 5 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்டதாகவும் அதனை அடுத்து இளைஞனை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையின் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love