சூடானில் அரசுக்கெதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சூடானில் பாண் உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதனையடுத்து பாண் விலை கடுமையாக உயர்ந்துள்ளதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்pது சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டதில் முன்னர் 19 பேர் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து கடந்த புதன்கிழமை ஜனாதிபதி பஷீருக்கு ஆதரவாக தலைநகர் கர்த்தூமில் நடைபெற்ற ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போட்டி பேரணியின் போது ஏற்பட்ட வன்முறைகளிப் போது மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என நியூயோர்க்கைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது