வடக்கில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் 230 பேருக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களை பூர்த்தி செய்திருந்த உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதிற்கெதிராக மேன்முறையீடு செய்துள்ள அவர்கள், தாம் வடக்கில் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்திருந்ததனையடுத்து அவர்களது இடமாற்றம் காவல்துறை மா அதிபரின் உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்காண்டோ தெரிவித்துள்ளார்.
முதலில் 135 பேரும், இரண்டாவது தடவையாக 40 பேரும் இடமாற்றத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதுடன் 56 உத்தியோகத்தர்கள் வடக்கில் பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் ரொஷான் பெர்காண்டோ தெரிவித்துள்ளார்.