184
மியன்மார் அரச தலைவர் ஆங் சான் சூகியின் ஆலோசகரான கோனி என்பவரை கொலை செய்த வழக்கில் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யாங்கோன் விமான நிலையத்தில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் கி லின் என்பவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்த வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வந்தநிலையில் கி லின் மற்றும் ராணுவ அதிகாரியான ஆங் வின் சா ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Spread the love