Home இந்தியா ஜம்மு காஷ்மீரில் 60 மணிநேரமாக மோதல் – 5பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் 60 மணிநேரமாக மோதல் – 5பேர் பலி

by admin


ஜம்மு காஷ்மீரில் கடந்த 60 மணிநேரமாக தீவிரவாதிகளுடன் இடம்பெற்ற மோதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள், 2 காவல்துறையினர் மற்றும் பொதுமகன் ஒருவர் என 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தீவிரவாதிகள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் கிராமத்தில் தீவிரவாதிகள் பலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலினையடுத்து நேற்று முன்தினம் முதல் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டனர்.

இதன்போது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இராணுவத்தினரும் பதில் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த மோதலானது 60 மணிநேரம் இடம்பெற்றதாகவுமஇந்த மோதல்கள் காரணமாக பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் உள்ளூர் மக்கள் தெரிவிதுள்ளதுடன் மோதலுக்கு பயந்து மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More