ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. மதத் தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பெருமளவான மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், காணமலாக்கப்பட்டோரின் உறவுகள், பொதுமக்கள் எனப் பெருமளவினர் வயது வேறுபாடின்றி கடும் வெயிலுக்கு மத்தியில் இந்தப் ரேணியில் கலந்துகொண்டுள்ளனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள், ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு நீதி வேண்டும் எனக் கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளைம் ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 10 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில ஆரம்பமாகிய இந்த பேரணி, முற்றவெளி வரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது