195
அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள டென்வர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். உள்ளு}ர்நேரப்படி நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 8 மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை அதே பாடசாலையைச் சேர்ந்த இருவர் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Colorado #shooting #school #students #dead
Spread the love