போபர்ஸ் வழக்கு தொடர்பாக டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றில் தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சி.பி.ஐ. மீளப் பெற்றுள்ளது
1986-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடம் பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்ததில் 64 கோடி ரூபா ஊழல் நடந்ததாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் 2005 ஆம் ஆண்டு விடுதலை செய்தநிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது.
13 ஆண்டுகள் தாமதமாக மேல்முறையீடு செய்து இருப்பதாக தெரிவித்து அதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் புதிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக தெரிவித்து குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக்; கோரி டெல்லி தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமனிறல் சி.பி.ஐ. கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ. அனுமதி கோருவது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதையடுத்து தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சி.பி.ஐ. நேற்றையதிம் மீறப்பெற்றுள்ளது