சீனா மிக மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். மத சுதந்திரம் தொடர்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இனங்கள் மற்றும் மத சார்பான சிறுபான்மை மக்களுக்கு எதிராக சீனாவில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்தான காலப்பகுதியில் சின்ஜியாங் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாம்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் சீனா தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும், உலக சனத்தொகையில் 83 வீதமானவர்கள் மத சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளான அல்லது மத சுதந்திரம் மறுக்கப்பட்ட நாடுகளில் வாழ்வதாகவும் மைக் பொம்பியோ சுட்டிக்காட்டியுள்ளார்.