பிகில் படத்தில் விஜயுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கத்திலேயே இல்லை என்கின்ற போதிலும் அவர் வருவது நிச்சயம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிகில் படத்தில் வரும் சிங்கப்பெண்ணே பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்து முடித்துவிட்டார் எனவும் வடபழனியிலுள்ள மோகன் ஸ்டூடியோஸில் தனது பங்குக்கான ஷூட்டிங்கை முடித்து கொடுத்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் எந்தவிதமான பாடல்களிலும் முகம் காட்டுவது தன் வழக்கமில்லையே என ரஹ்மான் மறுத்தாலும், அட்லி அந்தப் பாடல் இடம்பெறும் சூழலை விளக்கிக் கூறியதனையடுத்து நடிக்க சம்மதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் தோல்வியை நோக்கிச் செல்லும் சமயத்தில் இடம்பெறும் மோட்டிவேஷன் பாடலாக சிங்கப்பெண்ணே இடம்பெறுவதை ஏற்கனவே அறிந்திருந்த ரஹ்மானுக்கு, அட்லியின் விளக்கம் திருப்திகரமாக இருந்திருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சிங்கப்பெண்ணே பாடல் பெண்களுக்கான தேசிய கீதம் என ஒரு பக்கம் பேசப்பட்டுக்கொண்டிருக்க, அதில் விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் தோன்றுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியிருப்பது பிகில் படத்தின் தரத்தை வேறு தளத்துக்கே கொண்டு செல்கிறது எனலாம். #சிங்கப்பெண்ணே #விஜயும் #ஏ.ஆர் ரஹ்மானும் #நடிப்பு #பிகில் #அட்லி