195
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயே நேற்று சனிக்கிழமை குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டள்ளதாகவும் 21 வயதுடைய பற்றிக் க்ரூசியஸ் எனும் இளைஞரே இவ்வாறு குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #texas #அமெரிக்கா #துப்பாக்கிச்சூடு #பலி #காயம்
Spread the love