அமைச்சர் சஜித் பிரேமதாச சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசியக் கட்சியின் சுவை மற்றும் அனுபவம் தொடர்பில் நன்கு அறிந்தவராவார் எனவும் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒருபோதும் கட்சியின் சின்னத்தை மாற்றுவதற்கு இணங்க போவது இல்லை எனவும் அதனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுனக் கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.