156
பாறுக் ஷிஹான்
இரண்டு கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தவர்களை விசேட அதிரடிப்படையினர் மருதமுனையில் வைத்து கைது செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (15.09.19) விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கார் ஒன்றில் பயணம் செய்த நிலையில் மருதமுனை பெரியநீலாவணை எல்லைப்பகுதியில் வைத்து கைதாகினர். இவ்வாறு கைதான நபர்கள் தற்போது கல்முனை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கைதான நபர்கள் பொலனறுவை வெலிகந்தை காவற்துறைப் பிரிவில் பணியாற்றுவதாக விசாரணையில் குறிப்பிட்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love