152
மட்டக்களப்பு மாவடி பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்குண்ட 21 பேரை ஹெலிகொப்டர் மூலம் இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்து திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய 212 பெல் என்ற இராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு மீட்கப்பட்டவர்களின் உணவுத் தேவை, முதலுவதிகளை வழங்குதற்காக கடற்படையின் உயிர்பாதுகாப்பு குழுவொன்று குறித்த பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். #மட்டக்களப்பு #வெள்ளப்பெருக்கில் #மீட்பு
Spread the love