182
ஜெர்மனியின் ஹனாவு நகரில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். ஹனாவு நகரில் உள்ள 2 பார்களுக்குள் புகுந்த இனந்தெரியாத அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலியாகியதுடன் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பயங்கரவாத நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #ஜெர்மனி #துப்பாக்கிச்சூடு #பலி
Spread the love