Home இலங்கை ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

by admin

மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்ப வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டுமே ஏற்புடையதாகும் என அறியத்தரப்படுகின்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு இது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது கிராமம் இடர் வலயமாக குறிப்பிடப்பட்டிருந்தால் அத்தகைய வலயங்களுக்குள் பிரவேசிக்கவோ அல்லது அங்கிருந்து வெளிச் செல்லவோ எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது #ஊரடங்கு  #அறிவித்தல் #தேசியஅடையாளஅட்டை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More