167
மட்டக்களப்பு திகிலிவெட்டை பிரதேசத்தில், இலுப்படி மும்மாரி குளத்துவெட்டை வாய்க்காலுக்கு அருகில் காணப்பட்ட 03 கைக்குண்டுகள், நேற்று (10) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டுகளைக் கண்ட விவசாயியொருவர், காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து, குண்டுகள் செயலிழக்கப்பட்டன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவை, விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்;ட கைக்குண்டுகளாக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். #மட்டக்களப்பு #கைக்குண்டுகள் #விடுதலைப் புலிகள்
Spread the love