ஏவாள் தொடங்கி என் அம்மா வரை
பெண் உலகம் ஆண் சார்ந்தது தான் சார்ந்ததினால் தான் சாகும் வரை வாழ்வில்லை
ஜான்சிராணியே ஆனாலும் போருக்கு பிள்ளையுடன் தான் போக வேண்டும்
புதுமைப் பெண்ணையும்
புதினம் என்று கூறலையே புனிதமாகக் கருதும்- பூமி பெண்ணியத்தையும் கண்ணியமாய் கூறச் சொல்லும்- உலகம்
ஸ்த்ரி திரியாயும் தீயாயும்
எரிகிறாள்தான்
சீதை காலத்தில் இருந்து
படிக்காமலே பல பட்டங்கள்
இவள் உரித்து
உடுத்துக் களித்ததை விட உழைத்துக் கழித்ததே இங்கு அதிகம்
கடலில் முத்துக்கள் இருந்தாலும்
உப்புக்களே அதிகம்
இங்கும் கண்ணமாக்கள் இருந்தாலும் செல்லமாக்களே அதிகம்
நவ மங்கையவள் இல்லறத்திலும் நல்லறம் செய்வாள்
நாசா சென்றாலும் நாகரிகம் காப்பாள்
எண் இல்லாத கணிதம் உண்டு
பெண் இல்லாத மனிதர் இல்லை
கற்புடமை மாந்தரெல்லாம் காதலோடு கானல்நீராகாமல்
அறியாமை அகற்றி பெண்ணறம் பேணி அகிலம் ஆழ்வீராக!.
ஆக்கம்- ஜனந்தினி சுப்பிரமணியம்