164
வெள்ளை மாளிகை அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம் என்பதால் அதனைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த நிலையில் வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் இனந்தொியாதத ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். இதனையடுத்து ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயமடைந்த மர்ம நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டிரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் பாதியில் இருந்து வெளியேறினார்.
சிறிது நேரம் கழித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஒரு நபரை தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆயுதங்களுடன் வந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளாா்
இதேவேளை இவ்வாறு சுடப்பட்ட நபர் மன நிலை பாதிக்கப்பட்டவரா என்பது தொடா்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது #வெள்ளைமாளிகை #துப்பாக்கிச்சூடு #டிரம்ப்
Spread the love