தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன குறித்த அதிகாரியின் உடல் பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இது ஒரு மிருகத்தனமான செயல் எனவும் தென்கொரியா தொிவித்துள்ளது
வட கொரிய ராணுவத்தினா் அவரை சுட்டு, பின்னர் அவரது உடலின் மீது எண்ணெயை ஊற்றி எரித்துள்ளதாகவும் பலதரப்பட்ட உளவுத்துறை விசாரணையிலே இது தெரிய வந்துள்ளதாகவும் தென் கொரியா தொிவித்துள்ளது.
எனினும் இது குறித்து வட கொரியா இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #தென்கொரிய #அதிகாரி #வடகொரிய #இராணுவத்தினரால் #கொல்லப்பட்டு #எரிக்க