எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஓய்வு பெற்ற பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் ஏற்பட வாய்ப்புள்ள தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தொிவித்துள்ளார்.
மேலும் நில விவகாரத்தில் தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தொிவித்துள்ளாா்
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொய்யான பரப்புரைகளை பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக தமது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் அவா் தெமாிவித்துள்ளாா்.
நேற்றையதினம் நாரஹென்பிட்டவில் உள்ள உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கமல் குணரத்ன இல்லாறு தெரிவித்துள்ளார். #காணிஅபகரிப்பு #இடமளிக்கப்போவதில்லை #கமல்குணரத்ன #சட்டவிரோத #தொல்பொருள்