இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவது தொடர்பாக நாளை (28) நீண்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதற்காக இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய பிரிவினரின் தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் இது தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
அதேவேளை சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு, சனநெரிசல் மிகுந்த கொழும்பு மக்களுக்கு முதலாவதாக இந்தத் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக அது தொடா்பான விநியோகஸ்தர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சந்திர ஜயசுமன குறிப்பிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #கொழும்பு #கொரோனா_தடுப்பூசி #லலித்_வீரதுங்க